Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜ அலங்காரத்தில் ஆபத்சகாய ... வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு: பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

20 மார்
2023
12:03

 திருவண்ணாமலை, : திருவண்ணாமலையில், 400 ஆண்டு பழமையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் மடத்தை இடித்ததை கண்டித்து, கட்டடத்தின் மீது அமர்ந்து ஹிந்து முன்னணியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அம்மணி அம்மாள். இவர், 17ம் நுாற்றாண்டில் அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு புறம், 108 துாண்களுடன் கூடிய  மடம் கட்டி, அங்கேயே தங்கி கோவிலின் வடக்கு கோபுரத்தை பலரின் பொருளுதவியுடன் கட்டினார். இதனால் வடக்கு கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என, அழைக்கப்படுகிறது. அம்மணி அம்மாள்,  17ம் நுாற்றாண்டின் இறுதியில், ஈசான்ய லிங்கம் எதிரே ஜீவ சமாதி அடைந்தார். அந்த மடத்தை அவரது சீடர்கள் பராமரித்தனர். மடத்தை, 30 ஆண்டுகளாக முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லை.  இதனால் சில தனி நபர்கள் ஆக்கிரமித்தனர். இதை மீட்க, 1976 முதல், ஹிந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் போராடியதால், ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு,  அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பராமரிக்க உத்தரவிடப்பட்டது. அந்த இடத்தில், 3,800 சதுர அடியில், பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் ஆக்கிரமித்து,  வீடு, கார் ஷெட் கட்டியிருந்தார். இதை அகற்ற கோவில் நிர்வாகம், திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆக்கிரமிப்பை அகற்றி மடத்தை பாதுகாக்க, மூன்று நாட்களுக்கு முன்  நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடு, கார் ஷெட் அகற்றப்பட்ட நிலையில், திடீரென அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டது. மடம், 70 சதவீதம் இடித்த நிலையில், தகவலறிந்த ஹிந்து முன்னணியினர்,  அம்மணி அம்மாள் பக்தர்கள், அப்பணியை நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை அணுகிய போது, கட்டடம் சேதமடைந்ததால் இடித்ததாக  தெரிவித்தனர். இதனால் ஹிந்து முன்னணியினர், பாதி இடிக்கப்பட்ட கட்டடம் மீது அமர்ந்து நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி, 400 ஆண்டு பழமையான, நல்ல  நிலையில் உள்ள மடத்தை இடித்து, புராதனத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அறநிலையத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீசார் சமாதானப்படுத்தி  அனுப்பினர். இதுதொடர்பாக, அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
அவிநாசி; கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மாஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்சிவ சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar