Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானைஸ்வரர் கோவிலில் பங்குனி ... சதுர்முக முருகன் கோயிலில் அமாவாசை பூஜை சதுர்முக முருகன் கோயிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

21 மார்
2023
10:03

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகு சிறப்புடன் நடந்தது‌ இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13 நாட்கள் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அமாவாசை நாளான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி பெரிய மாரியம்மனை தரிசித்து, நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து, ரத வீதி சுற்றி வந்தனர். மதியம் 1:15 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, வீதி உலா துவங்கியது. இதனையடுத்து பக்தர்கள் தீ மிதிக்க துவங்கினர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தேனி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து பூக்குழி இறங்கி, தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினர். நகரின் பல்வேறு பகுதிகளில் தனி நபர்கள், பொது நல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கினர். விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் வளர்மதி மற்றும் பல்வேறு கோயில் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று மார்ச் 22 காலை 11 :15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar