Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொங்காளியம்மன் கோவிலில் ... ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று யுகாதி பண்டிகை: தெலுங்கு புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று யுகாதி பண்டிகை: தெலுங்கு புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

22 மார்
2023
09:03

யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தென்னிந்தியா முழுவதிலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. வசந்த காலத்தின் துவக்க விழாவாகவும் யுகாதி கொண்டாடப்படுகிறது. யுகாதி பண்டிகையானது சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.  
 
யுகாதி பண்டிகை என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கொங்கன் ஆகிய பகுதிகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொது தெலுங்கு புத்தாண்டு பிறப்பை யுகாதி பண்டிகையாக கொண்டாடுகிறோம். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் இந்த பண்டிகையை யுகாதி என்றும், மகாராஷ்டிர மக்கள் இதை குடிபாட்வா என்றும், சிந்தி மக்கள் சேதி சந்த் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். யுகாதி பண்டிகை என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கொங்கன் ஆகிய பகுதிகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொது தெலுங்கு புத்தாண்டு பிறப்பை யுகாதி பண்டிகையாக கொண்டாடுகிறோம். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் இந்த பண்டிகையை யுகாதி என்றும், மகாராஷ்டிர மக்கள் இதை குடிபாட்வா என்றும், சிந்தி மக்கள் சேதி சந்த் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.

யுகா என்ற சொல் வயது என்பதையும், ஆதி என்ற சொல் துவக்கம் என்பதையும் குறிக்கும். பொதுவாக யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதியிலேயே கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஒரு நாளிகை அமாவாசை திதி இருந்தாலும், அதற்கு அடுத்த நாளினையே கணக்கில் எடுத்துக் கொண்டு யுகாதி கொண்டாடப்படுகிறது.

2023 ம் ஆண்டு யுகாதி பண்டிகையானது இன்று மார்ச் 22 ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை 12.01 வரை மட்டுமே அமாவாசை திதி உள்ளது. பிறகு இரவு 10.24 வரை பிரதமை திதியும், அதுற்கு பிறகு துவிதியை திதியும் வருகிறது. சூரிய உதய நேரத்திற்கு முன்பாகவே அமாவாசை முடிந்து விடுவதால், அன்று நாள் முழுவதும் பிரதமை திதியாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.​

இந்து புராணங்களின் படி, பிரம்ம தேவன் தனது படைப்பு தொழிலை துவங்கிய நாளே யுகாதி பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோம். இது கலியுகம் துவங்கி நாளாகவும் கருதப்படுகிறது. சைத்ர மாதத்தில் நாள் வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் குறிப்பதால் இது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாள மாதங்கள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து (ஓம் நமோ நாராயணா) கணக்கிடப்படுவதை போல், தெலுங்கு மற்றும் கன்னட மொழி மாதங்கள் சந்திரனின் இயக்கத்தை பொறுத்தே கணக்கிடப்படுகிறது.

​யுகாதி கொண்டாட்டம்: இன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, யுகாதி அல்லது உகாதி பச்சடி உடனான அறுசுவை விருந்து சமைத்து, பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மனித வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி என அனைத்து கலந்தது என்பதால் வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் என அனைத்தையும் சேர்த்து பச்சடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களும் இதே பச்சடி செய்யும் வழக்கம் உள்ளது. மாவிலை தோரணங்களாலும், வண்ண வண்ண கோலங்களால் வீட்டை அழகுபடுத்துவர். தமிழ் புத்தாண்டை போலவே யுகாதி பண்டிகை அன்றும் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar