Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை! சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2012
11:09

நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழா, நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.நாமக்கல், புதன்சந்தை அருகே, நைனாமலை உள்ளது. இங்கு, 1,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவர் மன்னரால் கட்டப்பட்டதாக, வரலாறு கூறுகிறது.மேலும், கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து, மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில், வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும்.மலைப்பாதையில், வற்றாத ஊற்றுகளான, "அரிவாள் பாழியும் மற்றும் "அமையா தீர்த்தம் எனும், "பெரிய பாழியும் அமைந்துள்ளது, இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வரலற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும், புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாப்படுவது வழக்கம். இந்த மாதத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, ஸ்வாமி தரிசனம் செய்வர். அதில், மூன்றாவது வாரம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் வாரம் என்பதால், அதிகாலை முதலே, பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலையேறி மலைக்கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். மலை மீது ஏறமுடியாத பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர் ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.புரட்டாசி திருவிழா, செப்டம்பர், 22, 29ம் தேதியும், அக்டோபர், 5, 12ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. முதல் நாள் அன்று, வெளி மாவட்டம், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, அனுஷ்டானகுளம், சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, ... மேலும்
 
temple news
கோவை; கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் நான்காவது சனிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar