Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைப்பட்டி முத்தாலம்மன் கோயில் ... வடமதுரை காளியம்மனுக்கு சீர் வழங்கிய சவுந்தரராஜப் பெருமாள் வடமதுரை காளியம்மனுக்கு சீர் வழங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் துாக்கத்திருவிழா: துாக்கமரத்தில் ஏறிய 1352 குழந்தைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் துாக்கத்திருவிழா: துாக்கமரத்தில் ஏறிய 1352 குழந்தைகள்

பதிவு செய்த நாள்

26 மார்
2023
08:03

நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற துாக்க திருவிழாவில் 1352 குழந்தைகள் துாக்கமரத்தில் ஏற்றப்பட்டு துாக்க நேர்ச்சை நிறைவு செய்யப்பட்டது. தமிழக –கேரள எல்லையான கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் துாக்கத்திருவிழா கடந்த 16–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. குழந்தைகள் பிறக்கவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும் இந்த கோயிலில் துாக்கம் நடத்துவதாக தேவியிடம் பெற்றோர் வேண்டுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு துாக்க மரத்தில் ஏற்றுவதற்காக 1352 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர். இரண்டு சக்கரம் கொண்ட தேரில் 41 அடி உயரத்தில் இரண்டு துாக்க மரம் பொருத்தப்பட்டு அதில் நான்கு துாக்க வில்கள் கட்டப்பட்டிருக்கும். இந்த வில்களில் நான்கு விரதமிருந்த துாக்ககாரர்களின் இடுப்பை இணைத்து துணிகளால் கட்டிய பின்னர் நேர்ச்சை குழந்தைகளை அவர்கள் கையில் தாங்கி பிடித்ததும் துாக்க மரம் விண்ணை நோக்கி எழும்பும். இந்த தேர் கோயிலை ஒரு முறை வலம் வந்ததும் குழந்தைகள் இறக்கப்பட்டு கோயில் நடையில் வைத்து புனித நீர் தெளிக்கும் போது துாக்க நேர்ச்சை நிறைவு பெறும். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கிய துாக்க நேர்ச்சை இன்று அதிகாலையில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் தேவி ஆராட்டுடன் விழா நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar