Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு அந்தணர்குறிச்சியில் ... வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கங்கா ஆரத்தி: கங்கா மாதா வுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கங்கா ஆரத்தி: கங்கா மாதா வுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

29 மார்
2023
11:03

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாத விஷயங்களில் கங்கா ஆரத்தியும் ஒன்று. கடந்த வாரம் சார்ட் விசிட்டாக காசி போயிருந்த போது கங்கா ஆரத்தியை பார்க்க விரும்பி சென்றேன். காசியில் உள்ள கங்கை நதிக்கு நன்றிக் கடனாக தினந்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே கங்கா ஆரத்தி ஆகும். கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கைதான். வபெருமானின் நெற்றிக் கண்ணில் உதித்த ஆறு தீப்பொறிகளும் வாயு மற்றும் அக்னி தேவரால் கங்கையில் சேர்க்கப்பட்டன. அதை கங்கா தேவி சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்ப்பித்ததால் ஆறுமுகப் பெருமான் அவதரித்தான். கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கி புனித மடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே கங்கா ஆரத்தி ஆகும். இந்த மாபெரும் பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது வழக்கம். ஒரே நேரத்தில், ஒரே மாதிரி ஆடை அணிந்த பூசாரிகளால் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக உயர்ந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற நானாவித உபசாரங்களுடன் கங்கா மாதா வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். அந்த நேரம் பாடப்படும் ஆரத்தி பாட்டு என்பதும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

-எல்.முருகராஜ்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்பதி; வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதியில் மலையப்பசாமி கஜ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar