Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நவமி : கும்பகோணம் ராமசாமி ... கோவை கோதண்ட ராமசுவாமி கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு கோவை கோதண்ட ராமசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா

பதிவு செய்த நாள்

30 மார்
2023
11:03

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொண்டை மண்டல சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். ஆண்டுதோறும் பங்குனி மாதம், 10 நாட்கள் பெருவிழா விமரிசையாக நடக்கும். அந்தவகையில், இந்தாண்டிற்கான பங்குனி பெருவிழா, சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏப்., 1ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது. பங்குனி பெருவிழாவின் பிரதான நிகழ்வாக ஏப்., 3ம் தேதி காலை 6:30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:25 மணிக்கு பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 4ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறும். எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. திருஞான சம்பந்தர் எழுந்தருளல், எலும்பை பூம்பாவையாக்கி அருளல் நடக்கிறது. மாலை 2:45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது. ஏப்., 5ம் தேதி ஐந்திரு மேனிகள் விழா நடக்கிறது. ஏப்., 6ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் ஹரிஹரன், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar