Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் ... ராமநவமி சாய் ஜெயந்தி விழா : சாய்பாபா கோயில்களில் சிறப்பு ஆரத்தி வழிபாடு ராமநவமி சாய் ஜெயந்தி விழா : சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நவமி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராம நவமி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 மார்
2023
12:03

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா என்றும் அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு ராமநவமி உற்சவம் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (30ம் தேதி), ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. காலை 8:45 மணிக்கு பட்டாபிஷேகம், ராமச்சந்திர மூர்த்திக்கும், மூலவர் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கும் 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. இன்று மலை 4:30 மணிக்கு சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar