Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ... சிறப்பு அலங்காரத்தில் விளமல் மதுரபாஷினி அம்மன் அருள்பாலிப்பு சிறப்பு அலங்காரத்தில் விளமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஏப்
2023
02:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு கடந்த, 14ம் தேதி நோன்பு சாட்டப்பட்டு, கடந்த, 21ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள், வேப்ப இலை கலந்த மஞ்சள் நீரை ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். தேரில் எழுந்தருளிய அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூவோடு எடுத்து வந்த பக்தர்கள், மாரியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டு ஊர்வலமாக தெப்பக்குளம் அருகே இறக்கி வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்ய தயாராகி வருகின்றனர். இன்று கோவிலில், கொடி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாலையில் மார்க்கெட் ரோட்டில் திருவிழாவையொட்டி, பூவோடு மற்றும் அலகு குத்தும் திருவிழா நடக்கிறது. நாளை, (2ம் தேதி) ஏ.பி.டி., பூவோடு எடுத்தல், வரும்,3ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல், 4ம் தேதி மகுடம் வைத்தல்; 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு மா விளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு தேர் முதல் நாள் துவங்குகிறது. வரும், 6ம் தேதி தேர் இரண்டாம் நாள், வரும், 7ம் தேதி தேர் மூன்றாம் நாள், தேர்நிலைக்கு வருதல், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது. வரும், 8ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், வரும், 10ம் தேதி மகா அபிேஷகமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar