Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ... விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. சிறப்பான காலகட்டம் விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
துலாம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. பிள்ளைகளால் பெருமிதம்
எழுத்தின் அளவு:
துலாம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. பிள்ளைகளால் பெருமிதம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
06:04

சித்திரை: தொட்டதெல்லாம் துலங்கும்

தீர்க்க சிந்தனையும் தெளிவான வாக்கும் உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு கூடும். செயலில் திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழல் உருவாகும். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்று மகிழ்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் தேவையான உதவிகளைச் செய்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்த பிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர்.
 
குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனதில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை தொடரும் என்றாலும் அவ்வப்போது உங்களின் முன்கோபத்தால் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும்.

தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது பற்றிய எண்ணம் மேலோங்கும்.  விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான நிதியுதவி தாராளமாகக் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆதரவும், ஆலோசனையும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தமான தொழில்கள் சூடு பிடிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வளர்ச்சிப்பாதையில் விரைந்து பயணிப்பீர்கள். உங்களின் ஆர்வமும், திட்டமிடுதலும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்க வழிவகுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நவீன உத்திகளை கையாள்வீர்கள். வருமான உயர்வால் பழைய கடன்கள் அடைபடும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசு வகையில் சில பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். பணியிட மாற்றம் சம்பந்தமான கோப்புகள் பரிசீலிக்கப்படும். வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த செயல்கள் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ப புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம்.
கலைத்துறையினருக்கு  சீரான முன்னேற்றம் உண்டாகும்.  எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடினாலும் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள். வெளிநாட்டு பயணங்களால் இனிய அனுபவம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.  
அரசியல்வாதிகளுக்கு பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மக்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் கூடும். எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும்.  சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்கள் வகையில் பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் வளர்ச்சிக்கு துணைநிற்கும்.  தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் ஆதரவும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். படிப்புடன் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: செவ்வரளி மலர்களால் முருகனை அர்ச்சிக்க பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 8, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் செளம் சரவணபவ; ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ


சுவாதி: பிள்ளைகளால் பெருமிதம்

நிதானமான செயல்பாடும், உலக அனுபவ அறிவும் மிக்க சுவாதி நட்சத்திர அன்பர்களே, அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர் நீங்கள். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெற்று மகிழ்வீர்கள்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். சிக்கலான வழக்குகளில் இருந்தவர்களுக்கு திடீரென அனுகூலமான முடிவால் விடுதலை கிடைக்கும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். மனதில் புத்துணர்வும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
இந்த வருடம் நீங்கள் முடிக்க வேண்டும் என நினைத்த காரியம் கச்சிதமாக முடியும். மனதில் இருந்த கவலை விலகி நிம்மதி உண்டாகும். அரசு வகையில் நடக்க வேண்டிய விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேர்வதால் அசதி, அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். உதவி என்று வருபவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நண்பர்களுக்குள் இருக்கும் சண்டைச் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பீர்கள். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் உடனுக்குடன் கிடைக்கும்.
கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வீடு, வாகனம் தொடர்பான மராமத்துச் செலவுகள் அதிகரிக்கும்.  நெருப்பு, மின்சாரம், ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உறவினர், நண்பர்களுக்கு உதவிகள் செய்யும் முன் யோசித்து செயல்படுவது நல்லது.  வாக்குக் கொடுப்பதற்கு முன் நிதானம் தேவை. குடும்பத் தேவைக்காக செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். கடன் தொல்லை குறையும். உடன்பிறந்தோர் உங்களால் பயனடைவார்கள். நவீன உபகரணங்களை குடும்பத் தேவைக்காக வாங்குவீர்கள். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு சமுதாயத்தில்  செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். புத்திசாலித்தனத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். துணிந்து செய்யும் காரியங்கள் அனைத்தும் லாபகரமாகவே முடிவடையும் காலகட்டமாக அமையும்.  

தொழில், வியாபார விரிவாக்கத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். வங்கி மூலம் நிதியுதவி கிடைக்க வாய்ப்புண்டு. பங்குதார்களிடம் எதிர்பார்க்கும் பணம், ஆலோசனையோ தக்க சமயத்தில் கிடைக்கும். அரசாங்கம் மூலம் ஆதாயம் காண்பீர்கள். புதிய யுக்திகள் புகுத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். போட்டி பொறாமைகள் சற்று தலை துாக்கலாம். வாடிக்கையாளர்களின் ஆதரவால் விற்பனை நல்ல முறையில் நடக்கும். அதற்கேற்ப லாபமும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மைக்கு வழிவகுக்கும்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள்.   வருமானத்திற்கு எந்த குறையும் வராது. பயணங்களால் இனிய அனுபவம் ஏற்பட்டாலும் அசதி, அலைச்சலால் அவதிப்பட நேரிடும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும்.
 
பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் அன்பாகப் பழகுவீர்கள். இல்லத்தில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு வருமானம் இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமிதம் மனதில் நிறைந்திருக்கும்.  

கலைத்துறையினர் விடா முயற்சியுடன் செயல்பட்டு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். பணவரவு திருப்தி தரும். கடந்த காலங்களில் இருந்த தடைகள் நீங்கும். எப்போதும், எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீ்ரகள். வளர்ச்சிக்கான  புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். சக கலைஞர்கள் உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர். பயணங்களால் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு.  

அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். சமூகத்தில் முக்கியஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். கட்சிப் பணிகளில் சுறுசறுப்புடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் ஏற்பீர்கள். நண்பர்களாலும் தொண்டர்களாலும் ஏற்றம் காண்பீர்கள்.  

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது. விடாமுயற்சி இருந்தால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். சகமாணவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
பரிகாரம்: அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வர வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 4, 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா


விசாகம்: ஆன்மிகச் சுற்றுலா

மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வில் பீடு நடை போடும் விசாகம் நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமான சூழ்நிலை உருவானாலும் முடிவு சாதகமாக இருக்கும். மனதில் அவ்வப்போது வீண் ஆசைகள் தோன்றும். கட்டுப்பாட்டுடன் அதை புறக்கணிப்பது  நல்லது. அகலக்கால் வைக்காமல் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நல்லபடியாக முடியும். உங்கள் எண்ணங்களில் தெளிவும், செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடக்கும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உலக விஷயங்களை மேலோட்டமாகப் பாராமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டாகும்.

குடும்பம் பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் தீர்வதற்கான வழி கிடைக்கும். குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியத்துடன் செயல்படுவர். மருத்துவச் செலவு குறையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும், விட்டுக்கொடுப்பதும் நன்மையளிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். ஆன்மிகச் சுற்றுலாவாக திருத்தலங்களுக்கு யாத்திரை செல்ல வாய்ப்புண்டு. சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் போதும் விழிப்புடன் இருக்கவும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திருட்டுப் போன பொருளும் திரும்பக் கிடைக்கும். உங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்தவர்கள் மனம் மாறி விலகிச் செல்வர். சிலருக்கு வீடு அல்லது ஊர் மாற்றம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடைகள் ஏற்படலாம். விடாமுயற்சியுடன் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே சாதகமான பலன் கிடைக்கும். படிப்படியாக லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவர். கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் உங்கள் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல், உடல்சோர்வு ஏற்படலாம். வீண் கருத்து மோதல்களை தவிர்க்கவும். பணிச்சுமை காரணமாக சற்று கூடுதலாக உழைக்க நேரிடும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பீர்கள். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறுவதில் தாமதம் உண்டாகலாம். எண்ணங்கள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

 பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பேசிப் பழக வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவது நல்லது. கணவர் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்ற கலைஞர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.  மக்கள், தொண்டர்களின் மத்தியில் மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும். எந்த சவாலான விஷயத்தையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கட்சியினர் மத்தியில் திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிப்பர். வீண்பொழுது போக்குகள், தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர்கள் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். ஞாபகசக்திக்கான மனப்பயிற்களில் ஈடுபடுவர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
பரிகாரம்: நவகிரக குருபகவானுக்கு சுண்டல் நைவேத்யம் செய்து பூஜிக்க வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6, 7, 8
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ:

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar