Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ... தனுசு : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. வீடும் காரும் ரெடி தனுசு : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. சிறப்பான காலகட்டம்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. சிறப்பான காலகட்டம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
07:04

விசாகம்: மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வில் பீடு நடை போடும் விசாகம் நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமான சூழ்நிலை உருவானாலும் முடிவு சாதகமாக இருக்கும். மனதில் அவ்வப்போது வீண் ஆசைகள் தோன்றும். கட்டுப்பாட்டுடன் அதை புறக்கணிப்பது  நல்லது. அகலக்கால் வைக்காமல் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நல்லபடியாக முடியும். உங்கள் எண்ணங்களில் தெளிவும், செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடக்கும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உலக விஷயங்களை மேலோட்டமாகப் பாராமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டாகும்.

குடும்பம் பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் தீர்வதற்கான வழி கிடைக்கும். குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியத்துடன் செயல்படுவர். மருத்துவச் செலவு குறையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும், விட்டுக்கொடுப்பதும் நன்மையளிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். ஆன்மிகச் சுற்றுலாவாக திருத்தலங்களுக்கு யாத்திரை செல்ல வாய்ப்புண்டு. சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் போதும் விழிப்புடன் இருக்கவும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திருட்டுப் போன பொருளும் திரும்பக் கிடைக்கும். உங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்தவர்கள் மனம் மாறி விலகிச் செல்வர். சிலருக்கு வீடு அல்லது ஊர் மாற்றம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடைகள் ஏற்படலாம். விடாமுயற்சியுடன் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே சாதகமான பலன் கிடைக்கும். படிப்படியாக லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவர். கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் உங்கள் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல், உடல்சோர்வு ஏற்படலாம். வீண் கருத்து மோதல்களை தவிர்க்கவும். பணிச்சுமை காரணமாக சற்று கூடுதலாக உழைக்க நேரிடும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பீர்கள். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறுவதில் தாமதம் உண்டாகலாம். எண்ணங்கள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பேசிப் பழக வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவது நல்லது. கணவர் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்ற கலைஞர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.  மக்கள், தொண்டர்களின் மத்தியில் மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும். எந்த சவாலான விஷயத்தையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கட்சியினர் மத்தியில் திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிப்பர். வீண்பொழுது போக்குகள், தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர்கள் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். ஞாபகசக்திக்கான மனப்பயிற்களில் ஈடுபடுவர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
பரிகாரம்: நவகிரக குருபகவானுக்கு சுண்டல் நைவேத்யம் செய்து பூஜிக்க வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6, 7, 8
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ:


அனுஷம்: சிறப்பான காலகட்டம்

தான் எடுத்த முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றிக் கொள்ளாமலும், திறமையால் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய அனுஷம் நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் லாபம் நிறைவாக கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். குருவருளால் இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். அதே நேரம் கோபத்தை விட்டு நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சில நேரத்தில் விபரீதமான ஆசைகள், எண்ணங்கள் தோன்றலாம் கவனமுடன் புறக்கணிப்பது அவசியம். புறம் பேசுபவர்களின் உறவைத் தவிர்த்து விடவும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவர்.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்னைகள் படிப்படியாக குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்தபடி லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர்.  கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வருங்கால வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டுவதோடு வளர்ச்சி நோக்கில் கடுமையாக உழைப்பீர்கள். புதிய நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக வாய்ப்புண்டு. கூடுதலான நேரம் பணியிடத்தில் உழைக்க நேரிடும். பணிகளை கிடப்பில் போடாமல் உடனுக்குடன் விரைந்து முடிப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரலாம்.  மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பீர்கள். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.  சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவர்.  

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வகையில் வீண் அலைச்சல், செலவு உண்டாகலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சகோதர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். நிச்சயம், திருமணம், வளைகாப்பு என சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

பெண்கள் நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். தோழிகளின் சந்திப்பால் மனசந்தோஷத்திற்கு ஆளாவீர்கள். அவர்கள்ின தேவையறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும்.தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் வருமானம் சீராக இருக்கும்.  சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவும் குறைவாக இருக்காது. நிதானமாகவும், பொறுமையுடனும் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மக்கள் ஆதரவு கண்டு மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்ப்பு, மறைமுகப் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொண்டர்கள் மத்தியில் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமுடன் படித்து முன்னேறுவர். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  ஞாபகசக்தி வளரவும், உடல்நலன் பெருகவும் அதிகாலையில் யோகாசனம், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
பரிகாரம்: முன்னோர் காரியங்களை செய்து வர வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 8, 9
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ


கேட்டை: சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்

சிக்கன எண்ணமும் உழைக்கும் குணமும் கொண்ட கேட்டை நட்சத்திர அன்பர்களே!
புத்தி சாதுர்யமும், அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது, எதை விடுவது என்ற தடுமாற்றம் அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். மனம், உடலில் திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எனினும் சிக்கனமாக இருந்து சேமிப்பை பெருக்குவீர்கள். சுபவிஷயத்தில் இருந்த தடைகள் விலகும். நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு என சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும்.
குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை துாண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் நிதானமுடன் செயல்படுவது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பகை, கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் மாறும்.

தொழில், வியாபாரத்தில் சாதுர்யமான செயல்பாடுகளால் தொழிலில் லாபம் கூடும். புதிய முடிவுகளை அவசரப்பட்டு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மறைமுகப் போட்டிகளை திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். திட்டமிட்ட பணிகளை முடிக்க கடுமையாக உழைப்பீர்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும்.

பணியாளர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். எந்த பிரச்னையிலும் யோசித்து முடிவு செய்வது நல்லது. வருமானம் திருப்தியளிக்கும். சக ஊழியர்களால் இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். பணிச்சுமையைச் சந்தித்தாலும் ஊதிய உயர்வுக்கு குறைவிருக்காது. புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்று முன்னேறுவீர்கள்.  

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். ஆடை அணிமணிகள்  சேர்க்கை உண்டு. வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். பேச்சால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானம் தேவை.

 கலைத்துறையினருக்கு குருவின் சஞ்சாரம் பணவரவை அதிகப்படுத்தும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவர். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வர். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். சேமிப்பு உயரும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடியும். ஆனால் கடின உழைப்பு தேவைப்படும். தலைமையின் ஆதரவுடன் புதிய பதவி, பொறுப்பு கிடைக்க வாய்ப்புண்டு. மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். தொண்டர்கள் வகையில் ஆடம்பரச் செலவு செய்ய நேரிடும். சில சமயத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை ஏற்காமல் முடிவு எடுப்பது மனவருத்தத்தை தரலாம்.

மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் தேர்ச்சி பெறுவர். எதிர்கால கல்விக்கான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்று மகிழ்வர். உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவர். நண்பர்களுடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு.

பரிகாரம்: நவகிரக புதன் பகவானுக்கு பச்சைபயறு சுண்டல் நெய்வேத்யம் செய்து வழிபட காரியம் கைகூடும்.
அதிர்ஷ்ட எண்: 4, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar