Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் தேர் ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மூக்குத்தி, பரிகார பூஜை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2023
05:04

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் மே 4 அன்று கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. நேற்று இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இன்று காலை 9:45 மணிக்கு கோயில் கொடி மரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டு, அபிஷேகம், மகாதீப ஆராதனை நடந்தது. தினமும் சுவாமி, அம்பாள் சிம்மாசனம், நந்தி, கிளி, குண்டோதரன், சிம்ம, கற்பக விருட்ஷம், காமதேனும், ரிஷப வாகனங்களில் வீதி வலம் வர உள்ளார். ஏப்., 30 காலை நடராஜர் புறப்பாடு, இரவு குதிரை வாகனத்தில் திக்விஜயம் நடக்கும். மே 1 காலை விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலமும், மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 2 காலை 11:00 - 12:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை, பூ பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வர உள்ளனர். மே 3 காலை 9:15 மணி முதல் ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 4 தீர்த்தவாரியுடன் இரவு கொடி இறக்கமும், மறுநாள் உற்சவ சாந்தி அபிஷேகம் நடந்து விழா நிறைவடையும்.

*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஏப்., 30 காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்குகிறது. மே 4 காலை கும்ப திருமஞ்சனமும், அன்று இரவு 2:00 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, வளரி, ஈட்டி, வால் ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். மே 5 காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar