அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி; சித்திரை வசந்த உற்சவம் நிறைவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2023 03:05
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ நிறைவையொட்டி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நிறைவாக இன்று அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரியில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார், பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.