Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனமழை : ராமேஸ்வரம் கோயில் ... குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசிலிங்கேசுவரர் கோவில் கருணாம்பிகை அம்மன் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
அவிநாசிலிங்கேசுவரர் கோவில் கருணாம்பிகை அம்மன் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

04 மே
2023
05:05

அவிநாசி: அவிநாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரைத் தேர்த்திருவிழாவில் அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் அரோகரா கோசத்தோடு தேர் வடத்தைப்பிடித்து இழுத்து வழிபட்டனர். முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக பெரிய தேர் திருவீதி உலா நடைபெற்றது. சுந்தரமூர்த்தி நாயணாரால் பாடல் பெற்றதும்,கொங்கேழு சிவாலயங்களுள் முதன்மைபெற்றதும் என்பது மட்டுமல்லாமல் காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்குரியதும் மிக பழமைவாய்ந்ததுமான ஸ்ரீ கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நாள்தோரும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய தினமான தேர் வடம் பிடிக்கும் நாளான 2ம் தேதி, 3ம் தேதி ஆகிய இருதினங்களில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்ட சோமாஸ்கந்தர் எழுந்தருளிய பெரிய தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சிறிய தேரான கருணாம்பிகை அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று காலை துவங்கி நடைபெற்றது.

பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் தேர் வடத்தை பிடித்து ரதவீதிகளில் இழுத்து வந்து இறைவனை வழிபட்டனர். முன்னதாக பக்தர்கள் தேரின் மீது ஏறி கருணாம்பிகை அம்மனை சிறப்பு அலங்காரத்தில் தரிசித்தனர். பல்வேறு சமூகத்தாரின் மண்டபங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கருணாம்பிகை அம்மன் தேரின் பின்பு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர் தேரை குழந்தைகள் உற்சாகத்துடன் இழுத்து வந்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து சண்டிகேசுவரர் தேர் மற்றும் பூமி நீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் தேரும் திருவீதிகளில் பவனிவந்தது. கோவை சாலையில் உள்ள தேர் நிலையிலிருந்து புறப்பட்டு மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து நிறைவாக மீண்டும் கோவை சாலை வழியாக அம்மன் தேர் பிற்பகல் 03.02 மணிக்கு நிலை சேர்ந்தது. தேர் விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar