Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சாத்தூரில் பச்சை பட்டு உடுத்தி ... சித்ரா பௌர்ணமி ; வேல்முருகனுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் சித்ரா பௌர்ணமி ; வேல்முருகனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க தங்க குதிரையில் கொட்டகுடி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோபாலா  கோஷம் முழங்க தங்க குதிரையில் கொட்டகுடி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

பதிவு செய்த நாள்

05 மே
2023
03:05

போடி: போடியில் சீனிவாசப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா ... கோவிந்தா... கோபாலா என்ற கோஷம் முழங்க கொட்டகுடி ஆற்றில் இறங்கினார்.

இந்த ஆண்டு சித்திரை மாதத்தை பொறுத்தவரை சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்துள்ளது. சுக்கிரன் ஆதிக்கம் வெண்பட்டுக்கு உகந்ததாகும். இதோடு சித்திரை முதல் தேதி, சித்ரா பவுர்ணமி வெள்ளி என்பதால் அனைவருக்கும் சுபிட்சம், அமைதி, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று போடி சீனிவாசப் பெருமாள் 5 அடி உயரத்தில் புதிதாக செய்யப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் வெண் பட்டு உடுத்தி அரோகரா... கோவிந்தா .... கோபாலா என்ற கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6 மணி அளவில் இறங்கினார். அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர்வலம் புரிந்தார்.

விழாவில் நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கம் முன்னாள் தலைவர் குமரன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் வடமலை ராஜையபாண்டியன் முன்னிலை வகித்தார். சீனிவாசப் பெருமாள் சேவா அன்னதான அறக்கட்டளை தலைவர் பாண்டியன் செயலாளர்கள் பிச்சைமணி, ராஜா, பொருளாளர் கணேசன் நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா .... கோபாலா .... என்ற கோஷத்துடன் கள்ளழகர் வேடத்தில் இருந்த சீனிவாச பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாரிமுத்து செய்திருந்தார்.

* உப்புக்கோட்டையில் வரதராஜ பெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜ பெருமாள் முல்லையாற்றில் பக்தர்கள் பரவசத்துடன் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி முல்லை ஆற்றில் இறங்கினார். உப்புக்கோட்டை, உப்பார்ப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* சித்ரா பவுர்ணமி முன்னிட்டு போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரபுத்திரளி தரிசனம் பெற்றனர் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar