Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... முத்தாரம்மன் கோயில் கொடைவிழா; பச்சைசாத்தி அம்மன் வீதி உலா முத்தாரம்மன் கோயில் கொடைவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டை நாதர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசல்
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டை நாதர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசல்

பதிவு செய்த நாள்

18 மே
2023
10:05

மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம்  திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக திருப்பணிகள்  நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சட்டை நாதர் சுவாமி கோவிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது மற்ற கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன்  முதலாவதாக  பசு, குதிரை,ஒட்டகம், யானை ஆகியவை மேற்கு கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் சென்றன. அதன் பின்னர்  மங்கள வாத்தியங்கள் முழங்க  தருமபுரம்  ஆதீனம்,  பக்தர்கள்  மேற்கு கோபுர வாசல்  வழியாக  கோவிலுக்கு சென்றனர் . 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு எதுவாக திறக்கப்பட்டுள்ளது.  பூஜைகளை திருக்கடையூர் மகேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் சூப்பிரண்டு செந்தில் ஆகியோர் செய்து இருந்தனர். மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது  பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மாதம் கும்பாபிஷேக யாகசாலை பணிக்காக மேற்கு கோபுர வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் பள்ளம் வெட்டிய போது  சுவாமி ஐம்பொன் சிலைகள் ,தேவாரப் பதிகங்கள்  பதிக்கப்பட்ட  செப்பேடுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar