Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டிற்கே வரும் கோயில் பிரசாதம் ; ... செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடைவிழா செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா மாரியம்மன் கும்பாபிஷேகம்; ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா மாரியம்மன் கும்பாபிஷேகம்; ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

19 மே
2023
01:05

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 24ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில் சந்தைப்பேட்டை மைதானம் அருகே இருந்த மகா மாரியம்மன் கோவில்களில் பல்வேறு புனர அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு கருங்கல்லால் கருவறை, அர்த்தமண்டபம், மூன்று நிலை விமானம், ஏக மண்டபம் அமைத்து புதிய கன்னிமூல விநாயகர் கோயில், துவார சக்திகளும் அமைக்கப்பட்டுள்ளன. வலது பாகத்தில் துர்க்கை அம்மன் திருக்கோயில் மற்றும் கன்னிமார் நவ கோள்களுக்கு தனி கோயில், விமானத்தில் சூரிய கடவுள் குதிரை வாகனத்தில் காட்சி தருகின்றார். ஏக மண்டக தூண்களில் அன்னையின் அவதார திருமுறைகள் கலை நயமிக்க சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. மடப்பள்ளி அமைக்கப்பட்டு திருக்கோயில் முழுவதும் வர்ணங்கள் தீட்டப்பட்டு, திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விழாவை ஒட்டி இம்மாதம், 21ம் தேதி திருவிளக்கு வழிபாடு, பேரொளி வழிபாடு, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை, 10:00 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலத்தை வரவேற்றல், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம், மதியம் நடக்கிறது. இரவு முதலாம் கால யாக வேள்வி நடக்கிறது. 22ம் தேதி திருமஞ்சனம், 108 வகையான காய்கனி பூஜை உள்ளிட்ட வேள்வி மலர் வழிபாடு, திருமுறை இசைத்தமிழ் நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி விமான கலசம் நிறுவுதல், கன்னிமூல விநாயகர், துர்க்கை அம்மன், திருச்சுற்று மூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல், இரவு 7:00 மணிக்கு மகா மாரியம்மனுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவை சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar