Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட ... பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ருத்ரபிரயாக் ஸ்ரீகார்த்திகேய சுவாமி கோவிலில் கந்த யாஹ பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ருத்ரபிரயாக் ஸ்ரீகார்த்திகேய சுவாமி கோவிலில் கந்த யாஹ பெருவிழா

பதிவு செய்த நாள்

20 மே
2023
10:05

திருப்பூர்; ருத்ரபிரயாக்கில் உள்ள ஸ்ரீகார்த்திகேய சுவாமி கோவிலில், 108 சங்காபிஷேக வழிபாடு, கந்த யாஹ பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில், ஸ்ரீகார்த்திகேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஸ்ரீ தர்ம சாஸ்தா காசி யாத்திரை குழுவினர் சார்பில், 108 வலம்புரி சங்காபிஷேக வழிபாடு, ஸ்தாபனம், கந்த யாஹ பெருவிழா, சமீபத்தில், நடத்தப்பட்டன. ஸ்ரீ தர்ம சாஸ்தா காசி யாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் ஆரூர் சிவம் கூறியதாவது: கந்த புராணத்தில் க்ரவுஞ்ச பர்வதம் என குறிப்பிடுவது, இந்த மலையை தான். அதாவது, கிரீடம் தரித்தவன் என்பது பொருள். திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமி மலை முருகப் பெருமானுக்கு சாற்றிய வஸ்திரங்கள், ஸ்ரீகார்த்திகேய சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. உத்தரகாண்ட் மாநிலமே தெய்வ பூமிதான்; புராணம், இதிகாசங்கள் நிறைந்த இடம். அங்குள்ள முருகன் கோவில், அதன் சிறப்பு, மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. அதை பிரபலப்படுத்தும் வகையில், அம்மாநில சுற்றுலாத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். பிரதமரின் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமி, கோவை - பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், மயிலை ஆதீனம் திருஞானநந்த சுவாமி, சிரவையாதீனம் குமரகுருபர சுவாமி, ஆதீனம், உத்தரகாண்ட் மாநில அரசின் சுற்றுலாத்துறை கூடுதல் செயலர் ரவிசங்கர் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar