தொடர் விடுமுறை; திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2023 03:05
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர பகவான் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார். இதனால் பகவானை தரிசனம் மேற்கொள்ள தினம் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். ற்போது பள்ளி தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை திருநள்ளாறு வருகைப்புரிந்த பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர்.முன்னதாக நளன் தீர்த்த குளத்தில் குளித்து பக்தர்கள் தோஷங்கள் நீங்க புனித நீராடிய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சனிபகவானை தரிசித்து செய்தனர். தொடர் விடுமுறையால் திருநள்ளாறு பகுதியில் போக்குவரத்து நோசல் ஏற்பட்டது.பின்னர் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.