Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தன்னாசியப்பர் கோவில் நாளை ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பதிவு செய்த நாள்

20 மே
2023
09:05

மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் காலை யாகசாலை பூஜைகள் இன்று இரவு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞான பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோருடைய  செவியன் என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று மாலை கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. பூஜைகளை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar