Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி உண்டியலில் செலுத்திய நகையை ... ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருக கடவுள் பற்றி அமைச்சர் கிண்டல் பேச்சு! திருந்தவே மாட்டார்களா திமுக அமைச்சர்கள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2023
03:05

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடந்தது. தமிழக வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

கருத்தரங்கில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், வேளாண் பல்கலை, சர்க்கரை சத்து குறைவாக உள்ள நெல்லை கண்டறிய வேண்டும். வேளாண் துறையில் புதிய, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும், என்றார். இதன் பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் 10 லட்சம் எக்டர் பரப்பில், சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, 38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்திக்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலையில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயிற்சிக்காக ஆராய்ச்சி மாணவர்களை, வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தாண்டு, ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சிறு தானிய வளர்ச்சிக்காக, தரமான விதைகள் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்காக, ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து கள் இறக்குவதற்கான, விவசாயிகள் கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினரிடையேயும் கலந்தாலோசித்து, அரசு முடிவு எடுக்கும், என்றார்.  விழாவுக்கு, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். பல்கலை பயிர் இனப்பெருக்கம், மரபியல் மைய இயக்குனர் ரவிகேசவன் வரவேற்றார். வங்கதேசம் டாக்காவில் உள்ள, ஷெரி பங்களா வேளாண் பல்கலை துணைவேந்தர் முகமது ஷாகிதுார் ரஷித் புயான், உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

அரங்கத்தில் ஏற்பட்டது சலசலப்பு: கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், தமிழ் கடவுளான முருகனை அவமதிக்கும் வகையில், பேசிவிட்டு, ஜோவியலாக பேசியதாக கூறியது, சலசலப்பை ஏற்படுத்தியது. விழாவில் அவர் பேசுகையில், முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என, தினையை உட்கொண்டார். அவர் இரண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி. இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் தினை மாவு சாப்பிட்டார்.... எனக்கூறிய அவர், நிலைமையை புரிந்து கொண்டு சட்டென்று, ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன், என உளறி சமாளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தினையை, முருகனை எப்போது கண்டுபிடித்தனர் எனத் தெரியவில்லை, என்றார். அமைச்சரின் இப்பேச்சால் அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar