Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ... வைகாசி வெள்ளி: முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் வைகாசி வெள்ளி: முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் சேதமான சிலைகளால் நின்ற திருவிழா; செப்பனிடும் பணியால் மக்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
குருவித்துறையில் சேதமான சிலைகளால் நின்ற திருவிழா; செப்பனிடும் பணியால் மக்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

25 மே
2023
05:05

சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் உள்ள சேதமடைந்த உற்சவ சிலைகளை அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் செப்பனிடும் பணி நடந்தது.

இக்கோயிலில் கடந்த 2018ல் கும்பாபிஷேகம் நடந்த முடிந்தது. அடுத்த மாதமே இங்குள்ள உற்சவர்களான சித்திர ரத வல்லப பெருமாள், பஞ்சமூர்த்தி பெருமாள் ஆகிய 2 பஞ்சலோக சிலைகளையும் திருடு போனது. இதையடுத்து அச்சிலைகள் இரண்டும் கையில் இருந்த கதை பகுதியை அறுத்தெடுத்த நிலையில் போலீசார் கண்டெடுத்தனர். சேதமான சிலைகள் இரண்டையும் வைத்தே குருவித்துறை கிராம மக்கள் விழா கொண்டாடி வந்தனர். இந்நிலையில் சிலைகள் திருடு போனதால் வைகுண்ட ஏகாதசி திருவிழா 5 ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. தற்போது விழா கமிட்டி மூலம் நீதிமன்றத்தில் சிலையை சரிசெய்து கிராம மக்களின் வழிபாட்டிற்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் பொதுமக்கள், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சிலையை சரிசெய்து ஆகம விதிப்படி பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு செய்து விழா கொண்டாட உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அறநிலையத்துறை துணை ஆணையர் சுவாமிநாதன், மண்டல ஸ்தபதி ஜெயராம், எழுத்தர் ராஜேஷ் கண்ணா, சரக ஆய்வர் ஜெயலெட்சுமி, ஆலய அர்ச்சகர்கள் முன்னிலையில் சிலையின் சேதமான பகுதியை மாமல்லபுரம் பெருமாள் ஸ்தபதி ஆர்ட்ஸ் (பி) லிமி., சார்பில் செப்பனிடும் பணிகள் நடந்தது.

ஆலய அர்ச்சகர்கள் கூறுகையில், " இச்சிலையின் சேதமான பகுதிகளை செப்பனிடும் பணிகள் முடிவடைந்த பிறகு ஆகம விதிப்படி திருமஞ்சனம், கும்பாபிஷேகம் செய்து, சிலைகளை பிரதிஷ்டை செய்யப்படும். பிறகு இந்தாண்டின் இறுதியில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் உற்சவர் சிலையை கிராம வழிபாட்டிற்கு சென்று திருவிழா நடைபெறும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அதியமான்கோட்டை; அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அயோத்தி ஸ்ரீராம் மடம் சார்பில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 39 லட்சம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐதராபாத்தில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் வந்த பைரவன் என்ற நாய் சபரிமலை சன்னிதானத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரவிந்தர் மகா சமாதி தின அறை தரிசன நிகழ்ச்சி மழை காரணமாக வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar