Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவூற்று வேலப்பர் கோயிலில் ... தாரமங்கலம் கோவிலில் திருட்டு போன சிலைகள்  மீட்பு; போலி சாமியார் கைது தாரமங்கலம் கோவிலில் திருட்டு போன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மே
2023
11:05

ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா நடந்தது.

ராமநாதசுவாமி கோயிலில் மே 27 முதல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று காலை 6:40 மணிக்கு கோயில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லெட்சுமணர், அனுமான் பல்லாக்கில் புறப்பாடாகினர். பின் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ ராமர் எழுந்தருளினார். பின் ராமாயணம் வரலாற்றை நினைவு கூறும் விதமாக கோயில் குருக்கள் சிரஞ்சீவி கூறியதாவது : சீதையை விடுவிக்கும்படி இலங்கை மன்னர் ராவணனிடம் தம்பி விபீஷணர் கூறினார். இதனை கேட்காத ராவணன், விபீஷணனரை அவமரியாதை செய்தார். உடனே விபீஷணர் அங்கிருந்து வான் வழியாக புறப்பட்டு தனுஷ்கோடி வந்திறங்கினார். அங்கு சீதையை மீட்க ராமர், லட்சுமணர், அனுமான், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ராவணனின் ஒற்றனாக விபீஷணர் வருவதாக கூறி அனுமான் கோபமடைந்தார். உடனே ராமர் அடைக்கலம் தேடி வருவோருக்கு பாதுகாப்பு கொடுப்பது தர்மம் எனக் கூறி நடந்ததை கேட்டறிந்தார். பின் லட்சுமணரிடம் கடல்நீரை எடுத்து வரும்படி கூறிய ராமர், இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார். இதனையடுத்து கோயில் குருக்கள், விபீஷணருக்கு தலைப்பாகை அணிவித்து பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar