Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் விழா; குரு முகூர்த்த ஆலயங்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் விழா; குரு முகூர்த்த ஆலயங்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2023
10:06

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத குறடுடன்,  வெள்ளி நாற்காலி பல்லக்கில் தர்மபுர ஆதீன மடாதிபதி,  குரு முகூர்த்த ஆலயங்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி கொடியேற்றம்நடைபெற்றது. நாளை பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதினங்கள் 15 பேரின் (சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு கோயில்கள் உருவாக்கப்பட்ட இடமான) குரு முகூர்த்தங்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவிரிக்கரையில் ஆதீனத்திற்கு வடக்கு புறத்தில் எழுந்துள்ள இந்த இடத்திற்கு குரு முகூர்த்தம் என்று பெயர். தொடர்ந்து இங்கு பூஜை செய்ய, பாரம்பரியமான முறைப்படி கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனம் இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குரு முகூர்த்தத்திற்கு எழுந்தருளினார். இதனை அடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஒவ்வொரு முகூர்த்த ஆலயத்திலும் அந்தந்த மடாதிபதிகளின் வாழ்க்கை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar