மயிலம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2023 03:06
மயிலம்: மயிலம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். மயிலம் பகுதியிலுள்ள பெருமாள் வழிபாட்டு மன்றம் சார்பில் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர். இதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு மயிலம் பெருமாள் கோவிலில் வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர். இவர்கள் கூட்டேரிப்பட்டு, திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.