Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீர் அம்மன் கோவில் திருவிழா ... சென்னை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை சென்னை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜரின் இருப்பிடம், யோகா கலை உருவான இடம் சிதம்பரம்; தமிழக கவர்னர் ரவி பெருமிதம்
எழுத்தின் அளவு:
நடராஜரின் இருப்பிடம், யோகா கலை உருவான இடம் சிதம்பரம்; தமிழக கவர்னர் ரவி பெருமிதம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2023
03:06

சிதம்பரம்: யோகா கலை உருவான இடம் சிதம்பரம் என சிதம்பரத்தில் நடைபெற்ற தேசிய யோகா தின விழாவில் தமிழக கவர்னர் ரவி பேசினார். மேலும் நிகழ்வில் பங்கேற்று யோகாசனம் செய்தும் அசத்தினார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகயோகா துறை சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. பல்கலைகழக மைதானத்தில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி, பல்கலைகழக துணை வேந்தர் கதிரேசன், யோகா பயிற்சியாளர் கிருஷ்ணன் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த மெகா யோகா நிகழ்ச்சியை பல்கலை யோகா மையத் தலைவர் வெங்கடாஜலபதி ஒருங்கிணைத்தார். தொடர்ந்து, விழாவில் பங்கேற்று யோகா செய்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக கவர்னர் ரவி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ஆன்மீக நகரான சிதம்பரம் ‘ஆதியோகி என அழைக்கப்படும் நடராஜரின் இருப்பிடம், யோக ரிஷி பதஞ்சலி, திருமூலர் இருந்து வழிபட்ட இடம் இது, மெகா யோகா பயிற்சியை ஏற்பாடு செய்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். 83 வயது, மூத்த யோகா பயிற்சியாளர் கிருஷ்ணன் பங்கேற்றதற்கு பாராட்டுக்கள். மேலும் இளம் வயது சிறுமி ரவீனா திருக்குறள் 113 அதிகாரத்திற்கு யோகா செய்தது சிறப்பாக இருந்தது. ராமேஸ்வரம் தேவிப்பட்டினத்திலிருந்து ஆதி. யோகா அறக்கட்டளை குழுவினரின் யோகா அனைவரிடம் பாாரட்டுக்களை பெற்றுள்ளது. குழுவினரை பாராட்டுகிறேன். கின்னஸ் சாதனையாளர் சுபானுவின் சிவதாண்டவ யோகா செயல்விளக்கம் மிக சிறப்பாக இருந்தது.

யோகா உலகிற்கு நம் நாடு தந்த பரிசு. சிதம்பரம் யோகா கலை உருவான இடம். உருவாக்கியவர்கள் இருந்த இடம் இங்கு பிறப்பிடமாக தொடங்கிய யோகா நாடு முழுவதும் பரவியது. இன்று ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் இயற்றிய திருமந்திரத்தை பதஞ்சலி முனிவர் பயன்படுத்தினார். ஆசனங்களை பல தளங்களில் செயல்படுத்தி புதுமைகளை செய்திருக்கிறார். யோகா ஒரு சூத்திரம் உடலை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. செலவின்றி உடலை சமப்படுத்தி பாதுகாக்க உதவுகிறது. யோகா நமது வாழ்க்கை. பதஞ்சலியின் வழிபாடுடன் தொடங்கி முடியும் யோகா ஒரு அமைதியான சூழலை உருவாக்க உதவுகிறது. நமது மனது பலவற்றை பற்றி சிந்திக்கும் போது அதனை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவுகிறது. தமிழகத்தில் குறிப்பாக சிதம்பரம் யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. அதனை நாம் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. இன்று நாம் வாழ்க்கை முறை காரணமாக அதிகளவு பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளோம். சர்க்கரை நோய் பரவும் தன்மை கிடையாது. எனவே நமது வாழ்க்கை முறையை யோகா பயிற்சி கொண்டு மாற்றும் போது சர்க்கரை நோய் இல்லாமல் வாழ முடியும். யோகா கலை பயிற்சியை கிராமங்கள், நகரங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரப்ப வேண்டும். அப்போது நமது உடல் நலத்தை எளிய முறையில் செலவின்றி பாதுகாக்க முடியும். எனது சிறிய வயதில் பள்ளி பருவத்திலிருந்து யோகா செய்வதால் நல்ல உடல்நலத்தை பெற முடிந்தது. மருத்துவர்கள் எனது உடல் நலத்தை பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். எனது உடல்நலத்திற்கு யோகா முக்கிய காரணமாக உள்ளது. இன்று அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் நகரில் உள்ள தலைமை செயலகத்தில் நமது பாரத பிரதமர் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது நமக்கு பெருமிதமான நிகழ்வு: யோகா நமது நாட்டின் பெருமை. இதனை நாம் வாழ்வில் ஒரு பகுதியாக எடுத்து கொள்ளும் போது, நம்மால் வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், சோதனைகளை நமது உடல் மற்றும் மன நலத்தையும் பாதுகாத்து சிறப்பாக செயல்படுத்த பெரிதும் துணை | புரிகிறது என கவர்னர் ரவி பேசினார். நிகழ்வில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், ஏ.எஸ்.பி. ரகுபதி, உடற்கல்வித்துறை இயக்குநர் செந்தில்வேலன், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதிவாளர் சிங்காரவேலு நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar