Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் காளியம்மன் கோயில் ... 1500 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாதவூரில் பாசி படர்ந்த பிரம்ம தீர்த்தம் : பக்தர்கள் வேதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாதவூரில் பாசி படர்ந்த பிரம்ம தீர்த்தம் : பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
04:06

மேலூர்: திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தத்தை அறநிலையத்துறை நிர்வாகத்தினர் பராமரிக்காமல் பாசி படர்த்துள்ளதால் சுகாதார கேடாக மாறி வருகிறது.

இக் கோயில் கடந்த 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். சிவபெருமான் சனிபகவானின் வாதத்தை தீர்த்த தலம் என்பதால் வாதவூர் என்ற பெயர் பெற்றது. மேலும் மகாசிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம் உள்ளிட்ட 9 மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கோயிலில் சிவ, கபில், பிரம்ம, வாயு உள்ளிட்ட 7 வகையான தீர்த்தங்கள் உள்ளது. இதில் கோயிலுக்கு எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம் பராமரிப்பில்லாமல் வீணாகி வருகிறது.

பக்தர்கள் கூறியதாவது : சனி, பைரவருக்கு விளக்கேற்றினால் சகல தோஷங்களுக்கும் நிவர்த்தியாகும் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் சிரமப்படுகிறோம். கோயில் நிர்வாகத்தினர் பராமரிக்காததால் தீர்த்தத்தை சுற்றிலும் அசுத்தமாகவும் முட் செடிகள் வளர்ந்தும், மதுஅருந்தும் இடமாக மாறி வருகிறது. தவிர தீர்த்தம் முழுவதும் பாசி படர்ந்துள்ளதால் கோயில் நிர்வாகத்தினர் சுத்தம் செய்து தீர்த்தத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அறநிலையத்துறையினர் கூறுகையில், "சுற்றுலாத் துறை சார்பில் விரைவில் பிரம்ம தீர்த்தம் தூர்வாரப்படும்" என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar