Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல் கட்ட ஹஜ் பயணம் துவங்கியது! கோவில்பட்டி தூய வளனார் தேவாலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரி காந்தி மண்டப அஸ்தி பீடத்தில் சூரிய ஒளி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 அக்
2012
10:10

நாகர்கோவில்: காந்தி ஜெயந்தி தினமான நேற்று, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் விழுந்த சூரிய ஒளியை நூற்றுக்கணக்கானவர்கள் கண்டு, காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். காந்தியின் அஸ்தி 1948 பிப்.,12ல் கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக கடற்கரையில் அவரது அஸ்தி வைக்கப்பட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மண்டபம் கட்டப்பட்டு 1956ல் திறக்கப்பட்டது. காந்தி ஜெயந்தி அன்று 12 மணிக்கு அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது செப்., 30 முதலே மேற்கூரை துவாரம் வழியாக சூரிய ஒளி வரும். காந்தி ஜெயந்தி நாளில் மட்டும், அஸ்திகலசம் மீது ஒளி விழும். நேற்று சரியாக 11.55 மணிக்கு உள்ளே விழுந்த சூரிய ஒளி சிறிதுசிறிதாக நகர்ந்து 12 மணிக்கு அஸ்தி கலச பீடத்தின் மீது விழுந்தது. கூடிநின்றவர்கள் உணர்ச்சி பெருக்குடன் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராட்டையில் நூல்நூற்கும் நிகழ்ச்சியும், பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar