Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் ... முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாரணாசியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஷோடஷோபசார பூஜை: உற்சாக வரவேற்பு
எழுத்தின் அளவு:
வாரணாசியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஷோடஷோபசார பூஜை: உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
11:07

வாரணாசி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று அதிகாலை வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திரில் ருத்ராபிஷேகம் மற்றும் ஷோடஷோபசார பூஜைகளை நடத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம் சென்ற சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை நடத்தி வந்தார். வாரணாசி வந்த சுவாமிக்கு மந்திர் துவாரில், கோவில் பண்டிதர்கள் மற்றும் ஆணையர், அறங்காவலர்களால் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திர் கர்ப கிரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுவாமிகள் ருத்ராபிஷேகம் மற்றும் பட்டு வஸ்திரம், ரஜத வில்வம், ஸ்வர்ணபுஷ்பம் கொண்டு சிறப்பு பூஜைகளை செய்தார். வழிபாட்டிற்கு பின் ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளைக்கு சுவாமிகள் சென்றனர்.  இங்கு இன்று ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை தங்கி விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

முன்னதாக நேற்று 5ம் தேதி காசி ராமன் விலாசத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு காசி மேயர் தலைமையில் காசி பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இதே ராமன் விலாசத்தில் தான் பூஜ்ய பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் சிறப்பான
வரவேற்பு அளிக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar