காஞ்சி உற்சவர் வரதராஜ பெருமாள் திருமேனிக்கு ஜேஷ்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் உற்சவருக்கு ஆண்டுதோறும் திருவோணம் நட்சத்திரத்தில், ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து நேற்று, காலை 11:00 மணிக்கு வரதர் உற்சவர் திருமேனியில் சாற்றப்பட்ட தங்க கவசம் எடுக்கப்பட்டு திருமஞ்சனம் நடந்தது. இதனால், மூலவர் தரிசனம் நேற்று காலை நடைபெறவில்லை. மாலையில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜேஷ்டாபிஷேகத்திற்காக செவிலிமேடு சாலை கிணற்றில் இருந்து, புனித நீர் கொண்டு வந்து உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. அதே போல, தாயாருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை இம்மாதிரியான உற்சவர் திருமேனியில் சாற்றப்பட்டுள்ள தங்க கவசத்தை எடுத்து, சுத்தம் செய்து திருமஞ்சனம் இன்று காலை நடைபெற்றது.