Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மாரியம்மன் கோவிலில் ... வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா 18ம் தேதி துவக்கம் வனபத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையாத்தங்குடியில் காஞ்சி மகாப் பெரியவர் சிலை மறுபிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இளையாத்தங்குடியில் காஞ்சி மகாப் பெரியவர் சிலை மறுபிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2023
04:07

கீழச்சிவல்பட்டி: திருப்புத்தூர் ஒன்றியம் இளையத்தாங்குடி கைலாச விநாயகர் கோயில் ஊரணி வடகரை படித்துறையில் காஞ்சி சங்கர மட 63வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது.

இளையாத்தங்குடி கிராமத்திற்கும் காஞ்சிமடத்திற்கும் 128 ஆண்டுகால தொடர்பு உள்ளது. காஞ்சி மடத்தின் 65வது மடாதிபதியாக இருந்த சுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1939 ல் தேசாந்திரப் பயணத்தின் போது இளையாத்தங்குடி கைலாசநாதர் கோயிலில் சில நாட்கள் சிவபூஜைகள் செய்த நிலையில் முக்தியடைந்தார். அவரது நினைவாக கோயிலுக்கு அருகாமையில் வடதிசையில் அதிஷ்டானம் உருவாக்கப்பட்டது. காஞ்சி மடத்தின் தொடர் வழிபாட்டில் உள்ளது.  இங்கு வந்த68 வது மடாதிபதி மகா பெரியவர் சந்திர சேகரந்த சரஸ்வதி சுவாமிகளும் ஒண்ணே கால் ஆண்டு இளையாத்தங்குடியில் தங்கி பூஜைகளில் ஈடுபட்டார். அப்போது கைலாசவிநாயகர் கோயில் ஊரணி படித்துறையிலும் பூஜை செய்தார். இதனையடுத்து  2019ல் 68 வது மடாதிபதி மகா பெரியவர் சந்திர சேகரந்த சரஸ்வதி சுவாமிகள்  பூஜை செய்த ஊரணி படித்துறையில் அவரது சிலை பிரதிஷ்டை செய்து  நித்ய பூஜைகள் நடந்து வருகிறது.  ஊரணியில் நீர் பெருகும் போது பூஜைகள் செய்ய இயலாதநிலை உருவானது. இதனையடுத்து காரைக்குடி எஸ்.எல்.என்.நாராயணன் செட்டியார் முயற்சியால் சிலையை படித்துறையின் மேல்பகுதியில் பிரதிஷ்டை செய்ய  மடத்தின்அனுமதி கிடைத்தது.  இதனையடுத்து படித்துறையின் 3வது படிக்கட்டில் சிறு ஆலயம் உருவாக்கப்பட்டு சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி, கடம் புறப்பாடாகி காலை 10:11 மணிக்கு விமான கலசத்திற்கும் தொடர்ந்து  பெரியவர் சுந்தரேசர் அய்யர் தலைமையில் அபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த தீபாராதனையை கிராமத்தினர் தரிசித்தனர். எஸ்.எல்.என்.நாராயணன் செட்டியார், ரோட்டரி முன்னாள் ஆளுநர் பெரியணன் செட்டியார்,கிராமத்தினர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar