Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரஸ்வதியைப் பாடியவர்கள் கானல்நீர் வாழ்க்கை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
‘இவர்’ ஒரு தீர்க்கதரிசி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
04:07


பாரதியார் 39 வயதிலேயே காலமாகி விட்டார். அவரது இளமைக்கால இறப்பு குறித்து, முன்னதாகவே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவரது நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார்  (குவளைக் கண்ணன்).  ஒருமுறை பாரதியாரும், ஆச்சாரியாரும்  பேசிக்கொண்டிருந்தனர்.  “கிருஷ்ணா! நாலாயிர திவ்ய பிரபந்தத்தை  எத்தனை ஆழ்வார்கள் இயற்றினார்கள்?” “இது தெரியாதா! பத்துபேர் பாடினார்கள்,”. (ஆழ்வார்கள் 12 பேர் என்றாலும், ஆண்டாளை பெரியாழ்வாரோடும், மதுரகவியாழ்வாரை நம்மாழ்வாரோடும் இணைத்து பத்தாகச் சொல்வது வைணவ மரபு) “பத்து பேர் சேர்ந்து 4000 பாடல் எழுதியிருக்கிறார்கள். பார்... பார்...நான் ஒருவன் மட்டும் 6000 பாட்டு  எழுதுகிறேன்,”. “அது உங்களால் முடியாது பாரதி! ஏனெனில், கலியுகத்தில் மனிதனுக்கு ஆயுள் குறைவு. அதனால், நீங்கள் எடுக்கும் முயற்சி சந்தேகமே!” என்றார்  ஆச்சாரியார். பாரதி எழுத ஆரம்பித்து விட்டார். இடையில் வீட்டில் பணக்கஷ்டம், குடும்பத்தில் பிரச்னை, வியாதி இவற்றால் 66 பாடல்கள் தான் முடிந்திருந்தது. அதற்குள் அவரது விதியை ஒரு யானை முடிவு செய்து விட்டது. பிற்காலத்தில் வந்தவர்கள், அந்த 66 பாடல்களையும் தொகுத்து ‘பாரதி 66’ என்ற பெயருடன் பாடல்களை வெளியிட்டனர். பாரதியாரின் இளமைக்கால இறப்பு குறித்து, குவளையூராருக்கு ஏதோ உள்ளுணர்வு <உறுத்தி யிருக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar