ஆனி கடைசி செவ்வாய்: சுந்தராபுரம் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2023 10:07
கோவை : கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1ல்இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.