Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர ... வடமதுரை காளியம்மன், முனியாண்டி கோயில் கோயில் திருவிழா வடமதுரை காளியம்மன், முனியாண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3,500 ஆண்டுக்கு முந்தைய கற்கருவிகள் திருப்பத்துார் அருகே கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2023
05:07

திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே, 3,500 ஆண்டுகள் பழமையான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்பத்துார், துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சேகர், ஆய்வு மாணவர் தரணிதரன் மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கந்திலி அருகே மேற்கொண்ட கள ஆய்வில்,  3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, புதிய கற்கால தடயங்களான கற்கருவிகள் மற்றும் அவற்றை கூர்மைப்படுத்திய இடத்தை கண்டறிந்தனர்.


இது குறித்து, கல்லுாரி பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே சந்திரபுரம் மலை அடிவாரத்தில் நடத்திய கள ஆய்வில், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டன.  இங்கிருந்து, 50 மீட்டர் தொலைவில் சந்திரபுரம் மலையிலிருந்து வரும் ஓடையில் மேற்கொண்ட ஆய்வில், 12 செ.மீ., நீளம் கொண்ட மூன்றும், 6 செ.மீ., நீளம் கொண்ட ஒன்றும் என, 4 கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டு வேட்டையாடுவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் கற்கோடரிகளாக பயன்படுத்தி உள்ளனர். அத்தகைய மக்களே சந்திரபுரம் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு, இவைகளே சான்றுகளாக அமைகின்றன. ஏற்கனவே இங்கு, கற்கால மக்கள் வாழ்ந்த குகை, பாறை ஓவியங்கள் கண்டறிந்த நிலையில், கற்கால கருவிகள் கண்டறியப்பட்டது மேலும், வலு சேர்ப்பதாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar