Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருப்புக்கோட்டை பத்ரகாளியம்மன் ... சர்வம் சிவமயம்: அமர்நாத் பனி லிங்கத்தை வழிபட்ட அமெரிக்கர்கள் பரவசம் சர்வம் சிவமயம்: அமர்நாத் பனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2023
10:07

தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர்  மங்கள வாத்யங்கள் முழங்க மூலவர் சன்னதி  முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு கொடி கொண்டுவரப்பட்டது. விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில்  கொடிமரம் முன்பு எழுந்தருளினார்கள். இதனை தொடர்ந்து. கொடி மரத்திற்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள்பொடி. இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால். தயிர். சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கொடி ஏற்றப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.  விழாவின் ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar