Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி ... கொடைக்கானல் மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை கொடைக்கானல் மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரவன்பட்டி வயிரவ சுவாமி கோயிலில் ஆடி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைரவன்பட்டி வயிரவ சுவாமி கோயிலில் ஆடி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2023
02:07

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவ சுவாமி கோயிலில் ஆடி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இக்கோயிலில் 11 நாட்கள்  ஆடி பிரமோத்ஸவம் நடைபெறும். நேற்று பூர்வாங்க பூஜைகள் நடந்தன. இன்று விநாயகர் சன்னதி அருகே வயிரவர் சன்னதிக்கு முன்பாக அதிகாலை முதல் யாகசாலை பூஜைகள் நடந்து, வயிரவர் ஹோமம், நடந்து காலை 9:00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து கொடிப்படத்துடன் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார். பின்னர் கொடிமரத்தினருகே எழுந்தருளிய விநாயகர், வயிரவர் சுவாமிகளுக்கும், கொடிபடத்திற்கும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அடுத்து கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்து சுவாமிக்கு காப்புக் கட்டப்படுகிறது. இரவில் சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி காலையில் வெள்ளி  ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஜூலை 21 மாலையில் தேரோட்டமும், ஜூலை22 ல் தீர்த்தவாரி, வெள்ளிரதத்தில் சுவாமி புறப்பாடும் இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும். பதினொரம் நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும், வயிரவசுவாமிக்கும்  காலையில் மகா அபிஷேகம் மாலையில் திருக்கல்யாணம், இரவில் சுவாமிகள் திருவீதி உலாவும் நடைபெறுவதுடன் பிரமோத்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை ஏழக பெருந் திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar