Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக ... கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியீடு! கோவில்களில் வாடகை பாக்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 அக்
2012
10:10

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா,மும்மதத்தினர் பங்கேற்ற, ஒருமைப்பாட்டு உறுதிமொழியுடன் துவங்கியது. வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் கோயில் தேர் விழா. இதில் ஏழுநாட்கள் கலைவிழா நடைபெறும். இவ்விழாக்களில், அனைத்து சமுதாயத்தினரும் மத பாகுபாடின்றி கலந்து கொள்வது தனிச்சிறப்பு. இதன் துவக்க விழா நேற்று முன்தினம் கலக்டர் ஹரிஹரன் தலைமையில், சாதி, மத, நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழியுடன், கோலாகலமாக துவங்கியது. மும்மதங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.கலக்டர் ஹரிஹரன் சமுதாய ஒற்றுமை சீரழிந்துவரும், இந்த காலகட்டத்தில்,இதுபோல் சமுதாய ஒற்றுமையை வளர்த்து, பேணிகாக்கும் விழாக்கள் அவசியம். இதுபோன்ற விழாவில் கலந்து கொள்வதே பெருமையான விஷயம்,என்றார். இந்து சமய இணை ஆணையர்தனபால்,"" சமுதாய நல்லிணக்கத்தோடு, 60 ஆண்டுகளாக விழா நடப்பது மிகவும் பாராட்டுக்குறியது. இப்பகுதி மக்கள் ஒற்றுமையோடு வாழ, இவ்விழா ஒரு கருவியாக உள்ளது,என்றார். பாதிரியார்டேவிட் ,"" மதநல்லிணக்க உறுதிமொழி எடுத்து ,ஒரு விழா துவங்குவது இதுவரை எங்கும் நடந்ததில்லை. இயேசு, மக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகத்தான், மக்களுக்கு வந்த துன்பங்களை தாங்கிக்கொண்டு, தன்னையே அர்ப்பணித்தார். அதேநோக்கத்தை மனதில் கொண்டுதான் இந்த விழாவும் நடத்தப்படுகிறது,என்றார். தொண்டை மருத்துவக்கழக மாநில தலைவர் டாக்டர் சையத்பாசுதீன்,""நான் முஸ்லிமாக இருந்தாலும், இந்த பக்தசபாவில் ஒரு உறுப்பினராக இருப்பதிலும், விழாவில் கலந்து கொள்வதையும் பெருமையாக கருதுகிறேன். இன்று நாட்டில் நல்லது நடக்கிறது என்றால் அது நாம் கடவுள் மீது வைக்கும் நம்பிக்கைதான்,என்றார்.முன்னதாக கலக்டர் ஹரிஹரன் உறுதிமொழி வாசிக்க, பொதுமக்கள், அதிகாரிகள் அனைவரும், உறுதிமொழி எடுத்தனர். காந்திய இயக்க மாநில தலைவர் கரம்சந்த் நல்லுசாமி வரவேற்றார். பக்தசபா செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள புண்ணிய க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபாதுகா மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar