Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ ... மானாமதுரை சோமநாதர் கோயிலில் சனி மகாப்பிரதோஷ விழா மானாமதுரை சோமநாதர் கோயிலில் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்த தொட்டியில் சுகாதாரகேடு; மாசடைந்த தீர்த்த சுனை நீரால் சிரமப்படும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தீர்த்த தொட்டியில் சுகாதாரகேடு; மாசடைந்த தீர்த்த சுனை நீரால் சிரமப்படும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2023
05:07

போடி: போடி அருகே தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் வளாகப் பகுதியில் பராமரிப்பின்றி சுகாதார வளாகம், மாசடைந்த தீர்த்த தொட்டி சுனை நீரால் பக்தர்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.


போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சி உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில். ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலிகை கலந்த சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். இதோடு முருகன், ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிய நீராடி செல்வதற்கு புனித இடம் ஆகும். சுனை நீர் அமைந்துள்ள தொட்டி பகுதியில் மண் கழிவுகள், தண்ணீர் மாசடைந்து கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட சிரமமடைந்த நிலையில் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே சுகாதார வளாகம், உடைமாற்றும் அறைக்கான கட்டடம் கட்டப்பட்டும் உரிய பராமரிப்பு, தண்ணீர் வசதியின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. நீராடி வரும் பெண் பக்தர்கள் உடை மாற்ற முடியாமல் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். சுனை நீர் தொட்டியை சுத்தப்படுத்தி கழிவுநீரை வெளியேற்றிடவும், சுகாதார வளாகத்தை பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோயில் அறநிலைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar