Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் ... ஆடி முதல் நாள்: கோயில்களில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு ஆடி முதல் நாள்: கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முதல் அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆடி முதல் அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் ஆனி பிரதோஷம் மற்றும் ஆடி மாதம் முதல் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை மலை அடிவாரத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயில் கொளுத்திய நிலையிலும் மதியம் 2:00 மணி வரை சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.  போதிய மழையின்றி வனப்பகுதி வறண்டு கிடக்கும் நிலையில், கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு உடனடியாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மலையில் கோயில் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் மடங்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆடி முதல் அமாவாசை நாளான இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் சரக வனத்துறையினர் மலையில் வழித்தட பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar