Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... ஆடி மாத பிறப்பு: காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை ஆடி மாத பிறப்பு: காரமடை அரங்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிரோடைய்யா திருவிழா கோலாகலம் காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஹிரோடைய்யா திருவிழா கோலாகலம் காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
03:07

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த ஹிரோடைய்யா திருவிழாவில், ஏராளமானன மக்கள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரோடைய்யா திருவிழா நடந்தது. தொதநாடு சீமையை தலைமையிடமாக கொண்ட கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, பனஹட்டி மற்றும் டி. மணியட்டி ஆகிய கிராமங்களில் விழா நடந்தது. கிராமத்தில் உள்ள கோவில்களில் இருந்து, சங்கொலி எழுப்பி வனப்பகுதியில் அமைந்துள்ள பனகுடி எனப்படும் வனக் கோயிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடை திறக்கப்படும் பனகுடியில், பிரம்புகளை உரசி அதிலிருந்து வெளியேறிய தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றி, முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசு மாட்டின் பால், கொம்புத்தேன் மற்றும் தும்பையை வைத்து ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கலாச்சார உடையுடன் ஆண் பக்தர்கள் காணிக்கை செலுத்தி ஐயனை வழிபட்டனர். இக்கோவிலுக்குள் பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வன கோயிலில் இருந்து மீண்டும் சங்கொலி எழுப்பி கிராம கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக திரும்பினர். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (செவ்வாய்) தானிய திருவிழா நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள கல் தூணில் நெய் தீபம் ஏற்றி, வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்த மூங்கில் தழைகளில் தானிய வகைகளை கோர்த்து, அக்கபக்க கோவிலில் கட்டி வழிபாடு நடக்கிறது. இந்த பூஜை செய்வதன் மூலம், உணவு பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக, கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தில் மண்டைதண்டு திருவிழா நடக்கிறது. இதில் முதல் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்கள் பழங்கால ஆபரணங்கள் அணிந்து, கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar