Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி; காரைக்குடி கோயில்களில் ... பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் 30ல் சங்கிலியார், பரவையார் ஸமேத ஆலால சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கல்யாண மஹோத்சவம்
எழுத்தின் அளவு:
வரும் 30ல் சங்கிலியார், பரவையார் ஸமேத ஆலால சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கல்யாண மஹோத்சவம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2023
02:07

சென்னை: சென்னை, ஸ்ரீ சங்கிலியார் ஸ்ரீ பரவையார் ஸமேத ஸ்ரீ ஆலால சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கல்யாண மஹோத்ஸவம், 8ம் ஆண்டு ஆடி ஸ்வாதியை முன்னிட்டு வரும் 30ம் தேதி சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

வ்ய மங்கல பரஞ்ஜோதியான சிவபரம்பொருள் திருவருள் துணைக்கொண்டு நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ சோபக்ருத் வருஷம்,தக்ஷிணாயனம், க்ரீஷ்மருது ஆடி (கடகம்) மாதம் 14-ஆம் தேதி (30.07.2023) ஞாயிற்றுக்கிழமை சுக்லபக்ஷ த்ரயோதசி, மூலம் நக்ஷத்ரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மகர லக்னத்தில் திருக்கல்யாண மஹோத்ஸவம், ஸ்ரீ ஆலால சுந்தரமூர்த்தி ஸ்வாமிக்கு எட்டாம் ஆண்டு மஹோத்ஸவம். கோயம்பேடு ஸ்ரீ குசலவபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள கே.வி.டி மஹாலில் நடைபெறுகிறது. விழாவில் சிவாச்சார்ய பெருமக்கள், பட்டாச்சாரியார்கள், வைதீகர்கள், பக்த கோடிகள், அனைவரும் குடும்ப சகிதமாக மஹோத்ஸவத்தில் கலந்துக்கொண்டு ஸ்ரீ ஆலால சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவருள் பெறலாம்.

குருமார்கள் வழிபாடு: ஆன்மீக குருவை சற்குரு என்றும், பரமகுரு என்றும், சுவாமி என்றும், சத்புருஷன் என்றும் அழைப்பர். குருவை பின்பற்றுபவர்கள் சீடர்கள் ஆவர். குரு தனது (குரு குலத்தில்) சீடர்களுடன் தங்கி ஆன்மீகக் கல்வி அறிவை புகட்டுவார். குருவின் பரம்பரை தனது சீடர்களால் நீட்சி அடைகிறது. அதனை ஒரு பரம்பரை என்பர். இந்து சமய மரபுகளில் குருவானவர், ஸ்ருதி (வேதம்) எனப்படும் வேத மந்திரங்கள், வேதாந்தம், ஸ்மிருதி எனப்படும் பிரம்ம சூத்திரம், யோகா, சமயச் சடங்குகள், கர்ம யோகம். தாந்திரீகம், பக்தி, ஞான யோகம், இலக்கணம், மீமாம்சை, நியாயம், இதிகாசம் மற்றும் புராணங்கள் போன்ற ஆன்மீக கல்வியுடன் அரசியல் நுட்பம், அரச தந்திரம், அரச தர்மம், சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம், சமூகச் சடங்குகள் போன்ற வாழ்க்கைக்கு தேளையான விஷயங்களை சீடர்களுக்கு வாய்மொழியாக போதிப்பார். சீடர்களின் மனதில் உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவரே குரு ஆவார். இந்து சமயத்தில் குரு மிகவும் மதிக்கத் தக்கவராக விளங்குகிறார் மனுஸ்மிருதி குருவை, சீடனின் பெற்றோர்களுக்கு நிகராகவே போற்றுகிறது. இந்திய பண்பாட்டின்படி, குருவை அடையாத ஒருவனை அனாதை அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று குறிப்பிடுகிறது. அனாதை என்பதற்கு சமஸ்கிருத மொழியில் தருவை அடையாதவன் என்பவர். குரு சீடனுக்கு அறிவை வழங்குபவர் மட்டும் அல்ல தீட்சையும் வழங்குபவர் ஆவார். மேனும் சீடனுக்கு ஆத்ம ஞானத்தை உட்டி விஷேச முக்தி அடைய வழிகாட்டுபவர் குருவே. ஆன்மீக குருவின் முக்கியத்துவம் உபநிஷதங்களில் அதிகமாக காணப்படுகிறது. உபநிஷதங்களில் குருவானவர் இறைவனுக்கு நிகராக போற்றப்படுகிறார். குருவின் நினைவை போற்றும் விதமாக குரு பூர்ணிமா விழா ஆண்டு தோறும் சீடர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் குருவும், சிஷ்யர்களும் மழைக்காலத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கின்றனர்.

விழா நிகழ்ச்சிகள்: ஆடி மாதம் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (30.07.2023)
காலை 6.00 மணி முதல் கோபூஜை, குருவந்தனம், தேவதா அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம், புண்யாஹவாஜனம், வேதிகார்ச்சனை, ஹோமம், விசேஷ த்ரவியாஹுதி, மஹாபூர்ணாஹுதி, ஸ்ரீ சங்கிலியார் ஸ்ரீ பரவையார் ஸமேத ஸ்ரீ ஆலால சுந்தரமூர்த்தி ஸ்வாமி உற்சவமூர்த்திக்கு, மஹாபிஷேகம், கலசாபிஷேகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, கன்னிகா பூஜை, பிரம்மசாரி பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, திருவருட்பிரசாதம் வழங்குதல்.

மதியம் 12.00 மணிக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, திருவருட்பிரசாதம் வழங்குதல்
மதியம் 2.30 மணிமுதல் 5.30 மணி வரை நிருத்தியம் நடனப்பள்ளியின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்
மாலை 6.00 மணிக்கு: மாநில மகளிர்அணி நடத்தும் திருவிளக்கு பூஜை
மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ சங்கிலியார் ஸ்ரீ பரவையார் ஸமேத ஸ்ரீ ஆலால சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு : ஸ்ரீ ஆலால சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஓய்யாலி உற்சவம் இரவு 8.30 மணிக்கு : ஸ்ரீ ஆலால சுந்தரர் திருவீதி உலாக் காட்சி நடைபெறும்.

தொடர்புக்கு: ஸ்ரீ ஆலால சுந்தரர் இளம் அர்ச்சகர் நலச்சங்கம். செல் : 9790978741

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar