ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த வெளி மாநில, வெளிநாட்டு பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 05:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் வருடம் தோறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வெளி மாவட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் 5 கருட சேவை முடிந்த நாள் முதல் தற்போது வெளி மாநில பக்தர்களும் கோயிலுக்கு வரத் துவங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக ஆந்திர, கர்நாடகா, கேரள மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் வெளிநாட்டு பக்தர்களும் தற்போது கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரத்துவங்கியுள்ளனர். நேற்று காலை 11 மணிக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேர் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் கொடிமரம் வணங்கி ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசனம் செய்து பிரகாரம் சுற்றி வந்து அங்குள்ள ஓவியங்கள், கல் தூண்கள், சிற்பங்களை கண்டு வியந்தனர்.