Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவில் ஆடிப்பூரம் ... வாரணாசியில் சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி துவங்கியது வாரணாசியில் சர்வதேச கோவில்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலங்குளம் லெட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம், பஞ்சமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேலங்குளம் லெட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம், பஞ்சமி பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2023
03:07

மானாமதுரை: மானாமதுரை வேலூர் அருகே உள்ள வேலங்குளம் லெட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் மண்டல பூஜை விழா, ஆடிப்பூரம், பஞ்சமி பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மானாமதுரை வேலூர் அருகே உள்ள வேலங்குளத்தில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சேதமடைந்து கிடந்த லெட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மண்டல பூஜை விழாவிற்காக அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீரை கொண்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாராகி அம்மன், கருடாழ்வார் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் வேலூர், வேலங்குளம், கள்ளர்குளம், பெரிய கோட்டை, தெக்கூர், ஒத்த வீடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி உயர் நீதிமன்ற வக்கீல் கோவிந்தன் மற்றும் மீனா செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar