Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு ... ராமேஸ்வரம் ஆடித்திருவிழா; இன்று இரவு சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் ராமேஸ்வரம் ஆடித்திருவிழா; இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி சித்ரா நதியில் மகாஆரத்தி நிகழ்ச்சி; திரளானோர் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென்காசி சித்ரா நதியில் மகாஆரத்தி நிகழ்ச்சி; திரளானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2023
12:07

குற்றாலம்: தென்காசி சித்ரா நதி யானைப்பாலம் படித்துறையில் மகா ஆரத்தி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நதிகளை தேசிய மயமாக்குவோம், போற்றி பாதுகாப்போம் என்ற தாரக மந்திரமாக கொண்ட ரத யாத்திரை மகா ஆரத்தி வழிபாடுகள், மகா புஷ்கரம், நதிகளை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரசாரங்களை அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் கடந்த 12 வருடங்களாக செய்து வருகிறது. குற்றாலத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் முண்டகக்கன்னி அம்மன் அறக்கட்டளை சார்பில் மகா ஆரத்தி பெருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. அன்றயை தினம் குற்றாலம் அருவிக்கரை பகுதியிலும், நேற்று முன்தினம், புலியருவி பகுதியிலும் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.

3வது நாளான நேற்று காலை ம்ருத உஜ்ஜய ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, தம்பதிகள் பூஜை நடந்தன. தொடர்ந்து கருத்தரங்கு நடந்தது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் தலைவர் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்­சல அடிகள் தலைமை வகித்தார். அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணைதலைவர் பிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, வேலுார் தோபா சுவாமிகள் மடம் சுவாமி வேதபிரகாசானந்தா, சிவகாசி ரமேஷ் முன்னிலை வகித்தனர். அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் பொது செயலாளர் சேலம் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி, குற்றாலம் மவுனசாமி மடம் மூர்த்தி சுவாமி, அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா, கந்தர்வகோட்டை யோகி சிவபிரம்மானந்த சரஸ்வதி, வள்ளலார் சன்மார்க்க சங்கம் பண்டாரம் உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினர். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், சித்திரசபை நாட்டியாஞ்சலி, மாலை 3 மணிக்கு கருத்தரங்கு நடந்தது. நெல்லை உமையொருபாக ஆதீனம் உமாமகேஸ்வர சிவாச்சாரிய சுவாமிகள், சின்னசேலம் சுவாமினி சுத்தவித்யானந்த சரஸ்வதி, தர்மபுரி சுவாமி காளீஸ்வரானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு தென்காசி சித்ரா நதி யானைப்பாலம் படித்துறையில் சன்னியாசிகளினால் மகா ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், கங்கா மகா ஆரத்தி குழுவினர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar