Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி இரண்டாம் சோமவாரம்; ஈசனை வழிபட ... விஞ்ஞானம், மெய்ஞானம் - வேறுபாடு என்ன
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதி தரும் மஹாபெரியவர் சன்னதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2023
01:07


மிருதங்கத்திற்கு தோல் மாற்ற வேண்டியிருந்ததால் கடைக்குச் சென்றார் பாலக்காடு மணிஐயர். “தற்சமயம் எங்களிடம் மாட்டுத்தோல் இருப்பு இல்லை. அடிமாடு வந்ததும் தோலை உரித்துப் பதப்படுத்தி ஒரு வாரத்தில் தருகிறோம்” என்றார் கடைக்காரர்.
மனதிற்குள், ‘‘ஒரு ஜீவனை ஹிம்சைப்படுத்தி இந்த இசைத் தொழிலைத் தொடரத்தான் வேண்டுமா?” என சிந்தித்தபடி வீட்டுக்கு வந்தார்.
சாப்பிடப் பிடிக்காமல் படுத்து விட்டார். ஒப்புக்கொண்ட கச்சேரிகளை மட்டும் முடித்துக் கொடுத்தபின் புதிய கச்சேரிக்கு ஒப்புக் கொள்வதில்லை எனத் தீர்மானித்தார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு கச்சேரிக்காக சென்னை வந்த அவர் காஞ்சிபுரம் சென்றார். அங்கிருந்து 50 கி.மீ., தொலைவிலுள்ள கிராமத்தில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அங்கு போய் சுவாமிகளை தரிசித்த போது, “மணி... நீ நாளைக்குப் போகலாம். உன் தனி ஆவர்த்தனம் கேட்டு ரொம்ப நாளாச்சு” என்று சொல்லி விட்டு மஹாபெரியவர் பூஜைக்குச் சென்றார்.
பிரசாதம் பெற்ற போது மடத்தின் சீடர், “பெரியவா...உங்களைப் பார்த்து பேசணுங்கிறார்” என்றார்.
அங்கு, ‘‘ மணி, ஏன் உன் முகம் வாட்டமா இருக்கு?” எனக் கேட்டார் மஹாபெரியவர்.
‘‘இதுவரை நடந்தது போதும் பெரியவா. இனி ஜீவஹிம்சை செய்து மிருதங்க கச்சேரி செய்ய இஷ்டமில்லை. அதில் வரும் வருமானமும் வேண்டாம்” என்றார்.
‘‘மணி... சிவன் கோயில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?’’ எனக் கேட்டார்.
ஆமாம் என தலையசைத்தார்.
‘‘அவரது வேலை மிருதங்கம் வாசிப்பது. நீயோ கலியுகத்தின் நந்தி. மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் பாவம். அதே நேரம் கறவை நின்ற பசுக்களை அடிமாடாக விற்பதை தடுப்பது நம் கடமை. அது பெற்ற தாயாருக்கு சமம். மாடுகளைப் பராமரிக்காவிட்டால் நாட்டுக்கே தீங்கு ஏற்படும். பசுவைப் பாதுகாப்பது ஜீவகாருண்யம் மட்டுமல்ல மகாலட்சுமிக்கு செய்யும் பூஜையும் கூட. இனி இயற்கையாக மரணம் அடைந்த மாட்டின் தோலில் மிருதங்கம் செய்” என்றார். மறுநாள் காலையில் கச்சேரி செய்தபின் நிம்மதியுடன் புறப்பட்டார் மணிஐயர்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar