ஆடி இரண்டாம் செவ்வாய்; அன்னூர் மாரியம்மன் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2023 01:07
கோவை : கோவை மாவட்டம், அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.