Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... பழநி முருகன் கோயில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக நாளை நிறுத்தம் பழநி முருகன் கோயில் ரோப் கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
முத்துமாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2023
03:07

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி கிராமத்தில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் 40ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூலை 16 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று இரவு 8 மணியளவில் அம்மன் கரகம் எடுத்து கிராம வீதிகளில் முளைப்பாரி ஊர்வலம் வந்தது. இன்று காலை சர்வ மலர் அலங்காரத்தில் மூலவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

* பெரியபட்டினம் அருகே கடற்கரை கிராமமான தோப்புவலசையில் மாரியம்மன் கோயிலில் 285ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று இரவு 10 மணியளவில் கரகம், முளைப்பாரி, அக்னி சட்டி உள்ளிட்டவைகள் நேர்த்திக்கடனாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. நேற்று மாலை 6:00 மணியளவில் கோயில் வளாகம் முன்புறம் அக்கினி வளர்க்கப்பட்டு நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இன்று பகலில் அன்னதானமும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar