Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரிவாளில் ஏறிநின்று 8 கி.மீ., ... அருணாசலேஸ்வரர் கோவிலில் குதிரை வாகனத்தில் வலம் வந்த சேரமான் ராஜா அருணாசலேஸ்வரர் கோவிலில் குதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூ பல்லக்கில் எழுந்தருளிய வனபத்ரகாளியம்மன் ; அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூ பல்லக்கில் எழுந்தருளிய வனபத்ரகாளியம்மன் ; அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2023
10:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டின் ஆடிகுண்டம் திருவிழா கடந்த 18 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வு நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து நேற்று தேக்கம்பட்டி, நெல்லித்துறை,சமயபுரம்,வெல்ஸ்புரம்,கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாவிளக்கு எடுத்தும்,அலகு குத்தியும் திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து வண்ண,வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய அம்மன் திருக்கோவிலை வலம் வந்து மீண்டும் நிலையை வந்து அடைந்தது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்,திருக்கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி சிறப்பாக செய்திருந்தனர். பூ பல்லக்கில் எழுந்தருளிய அம்மனுக்கு தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகள் செய்து துவக்கி வைத்தார். பூப்பல்லக்கு பவனி ஏற்பாடுகளை உபயதாரர் கெண்டையூர் செல்வராஜ் செய்திருந்தார்.  இந்நிகழ்ச்சிகளில் தேக்கம்பட்டி, நெல்லித்துறை,சமயபுரம்,வெல்ஸ்புரம்,கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar