Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகிய பெருமாள் கோவிலுக்கு பூமி பூஜை ஆடி வெள்ளி; கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்.. வேப்பிலை காரியை தரிசித்து பரவசம் ஆடி வெள்ளி; கோயில்களில் அலைமோதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்தீஸ்வரர் கோயிலில் 1000கும் மேற்பட்ட மாணவிகள் திருவிளக்கேற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முக்தீஸ்வரர் கோயிலில் 1000கும் மேற்பட்ட மாணவிகள் திருவிளக்கேற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2023
10:07

மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1000 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக உயிர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்கு பூஜை, தெப்பக்குளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1980ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஆடிவெள்ளியை முன்னிட்டு இன்று (28ம் தேதி) நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விடுமுறை முடிந்து கல்வி ஆண்டில் பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும் சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி வெள்ளிக்கிழமையில் ஒரு விளக்கு பூஜையும், பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை வெள்ளியில் ஒரு விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

மாணவிகள் கூறியதாகவது.. தினமலர் சார்பாக நடைபெறும் இந்த விளக்கு பூஜையில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது. நாட்டின் நலன் வேண்டியும், மாணவிகள் கல்வியில் சிறக்கவும் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது என கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar