பதிவு செய்த நாள்
28
ஜூலை
2023
04:07
போடி: ஆடி 2 வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் 1008 தாமரை பூக்கள் அலங்காரத்தில் பத்மாவதி தாயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் எலுமிச்சை பழங்கள் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டன.
* போடி குலாளர்பாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி வழங்கப்பட்டன.
* போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
* போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.